Categories
கல்வி தேசிய செய்திகள்

‘கியூட்’ நுழைவுத்தேர்வு….. தொழில்நுட்ப காரணங்களால் ரத்து….. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு….!!!!

மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இளங்கலை பட்டப்படிப்பில் சேர்வதற்கு நுழைவு தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகின்றது. அதன்படி இரண்டு கட்டங்களில் முதல் கட்ட தேர்வு கடந்த ஜூலை மாதம் 15ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வு தொடங்கியது. ஒவ்வொரு நாளும் இரண்டு ஷிப்டுகளில் தேர்வு நடைபெறும். முதல் சிப்டில் நடந்த தேர்வில் நிர்வாகம் மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் 17 மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் பிற்பகலில் இரண்டாவது சிப்டில் நடைபெற்ற தேர்வு அனைத்து மாநிலங்களிலும் ரத்து செய்யப்பட்டதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இவற்றில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வானது வரும் 12ஆம் தேதி நடைபெறும் எனவும், ரத்து செய்யப்பட்ட தேர்வு 12 மற்றும் 14ஆம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களில் நடத்தப்படும் என்று தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வர்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள ஹால் டிக்கெட் கொண்டு இந்த தேர்வினை எழுதலாம் என கூறியுள்ளனர்.

Categories

Tech |