தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் ஓரளவிற்கு குறைந்து வரும் நிலையில் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடந்து வருகிறது. இருப்பினும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.
மேலும் தமிழகத்தில் படிப்படியாக பள்ளிகளை திறந்து முதலில் 10, 11, 12ஆம் வகுப்பு தொடங்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கிராமப்புறங்களில் ஆரம்ப பள்ளிகளை திறப்பது குறித்தும், சத்துணவு மாணவர்களுக்காக அங்காடி மையங்களை மீண்டும் திறப்பது குறித்தும் தமிழக அரசு ஆலோசிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.