Categories
மாநில செய்திகள்

கிராமங்கள்தோறும் கால்நடை வைத்திருப்போருக்கு…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!!

ராணிப்பேட்டையில் உள்ள இந்திய கால்நடை நோய் தடுப்பு மருந்து ஆராய்ச்சி நிலையத்தில் 100 கோடி மதிப்பில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதை கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவிலேயே தலைசிறந்த கால்நடை நோய் தடுப்பு மருந்து ஆராய்ச்சி மையம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆராய்ச்சி நிலையத்தை மேம்படுத்த 100 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.  தமிழகத்தில் உள்ள கிராமங்களில் விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளுக்கு நோய் இல்லாத மாநிலமாக மாற்ற முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக கிராமங்கள் தோறும் 7760 கால்நடைகளுக்கு சிறப்பு நோய் தடுப்பு முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |