Categories
மாநில செய்திகள்

கிராமசபை கூட்டம்: பொதுமக்களிடம் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல்…..!!!!!

தேசிய பஞ்சாயத்து ராஜ்தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று பஞ்சாயத்துகளில்சிறப்பு கிராமசபை கூட்டங்களை நடத்துவதற்கு உள்ளாட்சித்துறையானது அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்திலும் கிராமசபைக் கூட்டங்களை நடத்துபடி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். அந்த வகையில் தமிழகம் முழுதும் இன்று கிராமசபைக் கூட்டங்கள்  நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள செங்காடு எனும் கிராமத்தில் நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ஊராட்சிகளின் செயல்பாடு மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக கேட்டறிந்தார். அந்த கூட்டத்தில் பொது மக்களுடன் முதல்வர் சுவாரசியமான முறையில் கலந்துரையாடினார்.

அங்கு இருக்கக்கூடிய பொதுமக்களிடம், பயிர்க் கடன், ரேஷ்ன் பொருட்கள் முறையாக கிடைக்கிறதா..?, பள்ளிகளுக்கான மேலாண்மை குழு அமைக்கப்பட்டது‌ தொடர்பாக தெரியுமா..? ஆகிய பல்வேறு கேள்விகளை முதல்வர் கேட்டார். அதுமட்டுமல்லாமல் குடிநீர், ரேஷன் பிரச்சினைகள் தொடர்பாக கிராம மக்களிடம் கேட்டறிந்தார். அவ்வாறு அங்கு உள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த முதல்வர், அவர்கள் குறைகள் விரைவில் சரிசெய்யப்படும் என்று வாக்குறுதியளித்தார். சென்ற ஒன்றரை வருடங்களாக கிராமசபை கூட்டங்கள் நடைபெறாமல் இருந்த சூழ்நிலையில், இன்று நடைபெற்று வருகிறது. இந்த கிராமசபைக் கூட்டங்களில் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன. தமிழ்நாடு முழுதும் நடைபெறும் இந்த கூட்டங்களில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் கலந்துகொண்டனர்.

Categories

Tech |