மீன்பிடி திருவிழாவில் கலந்துகொண்டு பொதுமக்கள் மீன்களை பிடித்து சென்றுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கே.உத்தம்பட்டி கிராமத்தில் சின்ன கண்ணம்மா என்ற கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் தண்ணீர் நிறைய வந்துள்ளது. இதனால் அந்த கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்று கண்மாயில் மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது.
இந்த திருவிழாவில் உத்தம்பட்டி கிராம மட்டும் இன்றி அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள்,ஆண்கள், சிறுவர்கள் உள்ளிடோர் இந்த மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டனர். இதனையடுத்து அவர்கள் வலை, சேலை, வேட்டி போன்றவற்றை பயன்படுத்தி கெண்டை, நெத்திலி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை பிடித்தனர். அதன்பின்னர் அவர்கள் பிடித்த மீன்களை தங்களது வீடுகளுக்கு மகிழ்ச்சியாக எடுத்து சென்றுள்ளனர்.