ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நேற்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை அரேபாளையம் கிராமத்திற்குள் நுழைந்து தெருக்களில் உலா வந்தது.
இதனை பார்த்த மக்கள் அச்சத்தில் வீடுகளுக்குள்ளையே முடங்கினர். சுமார் 1 மணி நேரம் அங்கும் இங்கும் சுற்றி வந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. எனவே வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.