Categories
சினிமா தமிழ் சினிமா

கிராமத்தில் படித்த பெண்களின் நிலை இப்படித்தான் இருக்கு…. எதிர்நீச்சல் சீரியல் குறித்த விமர்சனத்திற்கு இயக்குனர் விளக்கம்….!!!!

எதிர் நீச்சல் சீரியல் அவ்வப்போது சில சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. முன்பாக போட்டோ கிராபர்களை இழிவுப்படுத்தியதாகவும், நடைமுறையில் இல்லாததை மிகைப்படுத்தி கூறுவதாகவும் குற்றசாட்டுகள் பெறப்பட்டது. இது தொடர்பாக ஏற்கனவே சீரியல் குழுவினர் விளக்கம் அளித்திருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் சிலர் இயக்குநர் திருசெல்வத்திடம் எதிர்நீச்சல் சீரியல் தொடர்பாக சில கேள்விகளை எழுப்பி இருந்தனர். அவற்றில் “படித்த பெண்களை ஏன் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைக்க பார்க்கிறீர்கள்..?

இதுபோன்று இப்போதும் நடக்கிறதா..?” என கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு திருசெல்வம் பதில் அளித்துள்ளதாவது, இதுபோன்ற சம்பவங்கள் இன்னமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. நகர்ப்புறங்களில் வேண்டுமானால் குறைந்து இருக்கலாம். கிராமப்புறங்களில் படித்த பெண்களின் நிலை இப்படித் தான் உள்ளது. என்னுடைய அனுபவத்தில் இருந்து நான் இப்படி ஒரு கதையை எடுத்திருக்கிறேன். இது என் வீட்டிலும் நான் பார்த்த பல பேர் வீட்டிலும் பெண்களுக்கு நடந்திருக்கிறது. பெண்களை வீட்டிற்குள் அடைத்துவைப்பது என் நோக்கமல்ல.

அப்படி அவர்களை நிர்பந்தித்து அடைத்து வைக்கும்போது அவர்கள் எடுக்கும் முடிவு குறித்துதான் இந்த சீரியலின் கருத்து உள்ளது என கூறியுள்ளார். எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாகிய முதல் நாள் முதல் தற்போதுவரை குடும்ப பெண்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்று வருகிறது. இப்போது கதாநாயகியின் தைரியமான எழுச்சியுடன் மும்முரமான அடுத்த கட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

Categories

Tech |