தேன்கனிக்கோட்டை அருகே சரக்கு வாகனத்தை கவிழ்த்து தக்காளியை சேதப்படுத்திய யானைகள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை அருகே இருக்கும் நொகனூர் வனப்பகுதியில் மூன்று காட்டு யானைகள் முகாமிட்டிருக்கின்றது. இந்த யானைகள் இரவு நேரங்களில் கிராமங்களுக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி விடுகின்றன.
இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு யானைகள் நொகனூர் கிராமத்துக்குள் நுழைந்து ருத்ரா என்பவரின் வீட்டின் முன்பு தக்காளி லோடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனத்தை புரட்டி போட்டது. மேலும் தரையில் சிதறிய தக்காளிகளை தின்றும் கால்களால் மிதித்தும் யானைகள் நாசம் செய்துவிட்டு பின் மீண்டும் யானைகள் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.