நடிகை சாக்ஷி அகர்வால் கிராமத்தில் புடவையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் நடிகை சாக்ஷி அகர்வால் இளம் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர். இதனிடையே காலா மற்றும் விஸ்வாசம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சின்ரெல்லா , டெடி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் ‘புரவி’ என்ற திரைப்படத்தில் போராளியாக நடித்து வருகிறார் .
சமூக வலைத்தளங்களில் இவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை பகிர்ந்து தனது ரசிகர்களையும் தினமும் உடற்பயிற்சி செய்யுமாறு அறிவுறுத்தி வருகிறார். மேலும் எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது கிராமத்தில் புடவையில் இருக்கும் அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களால் கவரப்பட்டு லைக்ஸ்களை குவித்து வருகிறது.