சார்பட்டா பரம்பரை பட நடிகை துஷாராவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை . இயக்குனர் பா ரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்தில் துஷாரா, கலையரசன், காளி வெங்கட், தங்கதுரை, சந்தோஷ், பசுபதி, ஜான் விஜயன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Thanks anna! https://t.co/I2l813Emll
— Dushara (@officialdushara) April 19, 2021
கே 9 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி துஷாரா கிராமத்து பெண் கெட்டப்பில் இருக்கும் அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.