Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கிராமத்து ஸ்பெஷல்…நாட்டுக்காய் சாதம்…!!

நாட்டுக்காய் சாதம் செய்ய  தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய்                                               – 2
அவரைக்காய்                                             –  50 கிராம்
பீன்ஸ்                                                              –  50 கிராம்
மஞ்சள்தூள்                                                  –   கால் டீஸ்பூன்
மிளகுப்பொடி                                              –  1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி                –  1 டீஸ்பூன்
பெருங்காயம்                                              –  ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய்                                       – 3 டீஸ்பூன்
சுக்கு பவுடர்                                                 –  1/2 டீஸ்பூன்
வறுத்த உளுத்தம்பருப்பு                       – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை, உப்பு                               – தேவையான அளவு
சாதம்                                                                – 3 கப்

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பெருங்காயம், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின்னர் அதனுடன் இஞ்சி, கத்தரிக்காய் ,அவரைக்காய் ,பீன்ஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும் .

வதங்கியவுடன் அதில் மஞ்சள் தூள் கால் டிஸ்பூன், மிளகாய் தூள் 1 டிஸ்பூன் சேர்த்து வதக்கி தேவையானஅளவு  உப்பு  போட்டு சிறிது தண்ணீர் விட்டு காய்களை நன்கு வேக விடவும்.

தண்ணீர் வற்றியதும் அதனுடன் 3 கப் சாதம், சுக்கு பவுடர், உளுந்தம்பருப்பு பொடியை  சேர்த்து நன்கு கிளறி விடவும.

இறுதியில், மசாலாவின்  பச்சை வாசனை போனதும்  இறக்கி ஊறுகாயுடன் பரிமாறலாம். இப்போது சுவையான நாட்டுக் காய் சாதம் ரெடி.

Categories

Tech |