Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிராமத்தை குறிவைத்து தாக்கிய கொரோனா… ஒரே நாளில் உயர்ந்த பாதிப்பு… பரிசோதனை தீவிரம்..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கொரோனாவால் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பழனி அருகே கோரிக்கடவு கிராமத்தில் வசித்து வரும் தொழிலாளி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்து வீட்டாருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருடைய குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கும், பக்கத்து வீட்டில் 3 பேருக்கும் என மொத்தம் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா பரவல் காரணமாக சுகாதார பணிகள் அந்த கிராமத்தில் கிருமிநாசினிகள் தெளித்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுருளியாண்டி, சுகாதார துணை இயக்குனர் ஜெயந்தி, ஊராட்சி நிர்வாகத்தினர், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோர் ஆய்வு செய்தனர். அதன்பின் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்த பகுதி மூடப்பட்டது.

Categories

Tech |