சாலை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கோட்ட பொறியாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பாக நெடுஞ்சாலைத்துறை சாலை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் 41 மாத பணி நீக்கத்தை பணிக்காலமாக மாற்ற வேண்டும் எனவும், நெடுஞ்சாலைப் பராமரிப்பு பணிகள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்தவேண்டும் எனவும், கிராமப்புறங்களில் வசிக்கும் இளைஞர்களுக்கும் சாலை தொழிலாளர் பணி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் சாலை தொழிலாளர்கள் பணியில் இருக்கும்போது உயிரிழந்தால் அவர்களுடைய வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் எனவும் கூறினர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மேலும் வாழைக் கன்றுகளை வைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.