Categories
தேசிய செய்திகள்

கிராமப்புற மக்களுக்கு போஸ்ட் ஆபீஸில் இப்படி ஒரு திட்டமா?…. அட இத்தனை நாள் தெரியாம போச்சே…. உடனே ஜாயின் பண்ணுங்க…..!!!!

நாடு முழுவதும் உள்ள மக்களின் நலனுக்காக தபால் நிலையங்களில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கிராமப்புற மக்களுக்கும் ஆயுள் காப்பீடு சேவைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 1995 ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி கிராமப்புற தபால் ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் உள்ளன. அதில் கிராம சுமங்கல் தபால் ஆயுள் காப்பீடு திட்டம் ஒரு மணி பேக் பாலிசி திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தில் அதிகபட்ச உத்திரவாத தொகை 10 லட்சம் ரூபாய்.

குறிப்பிட்ட காலத்தில் வருமானம் வேண்டும் என்பவர்களுக்கு இது ஒரு உகந்த திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் பாலிசிதாரர் உயிருடன் இருக்கும் போது குறிப்பிட்ட காலத்திற்கு அவர்களுக்கு தொடர்ந்து வருமானம் வழங்கப்படும். ஒருவேளை அவர் உயிரிழந்து விட்டால் ஒட்டுமொத்த தொகையுடன் போனஸ் தொகையும் சேர்த்து பாலிசிதாரரின் வாரிசு அல்லது நாமினிக்கு வழங்கப்படும். இந்த திட்டத்தில் இணைய குறைந்தபட்சம் 19 வயது முதல் அதிகபட்சம் 40 வயது வரை இருக்கலாம். இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் வருடத்திற்கு 45 ரூபாய் போனஸ் வழங்கப்படும்.

Categories

Tech |