Categories
அரசியல் மாநில செய்திகள்

கிராமிய கலைகளுக்கு புத்துயிர் கொடுக்கும் “நம்ம ஊரு திருவிழா”…. வானதி சீனிவாசன்…!!!!

நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் கலை விழா நடத்துவதை பாஜக சார்பில் வரவேற்பதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆம் தேதி  ஆகிய 3 நாட்கள் சென்னையில் ‘நம்ம ஊரு திருவிழா’ நடைபெறுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த திருவிழாவுக்காக தமிழக அரசு சார்பாக ரூ.91 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், கிராமிய பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் ஊட்ட நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் கலை விழா நடத்துவதை பாஜக சார்பில் வரவேற்கிறேன். தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் நம்ம ஊரு திருவிழாவை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |