கிராமில் பல நன்மைகள் இருந்தாலும் அதில் சில பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. அதைப்பற்றி நாம் இதில் தெரிந்து கொள்வோம்.
கிராம்பில் இருக்கும் முக்கியமான கலவை பொருள் யூஜெனால். இது ஒவ்வாமையை உண்டாக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றது. கிராம்பு நறுமணமிக்க ஒரு பொருள். அரோமாதெரபி பல் மருத்துவத்திற்கான எண்ணெய் வடிவில் பயன்படுத்துகிறது.
வயிற்றுப்போக்கு , முகப்பரு, செரிமான பிரச்சனை, சளி மற்றும் இருமல் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க கிராம்பு பரவலாகப் பயன்படுகிறது. யூஜெனால் முக்கிய ஊட்டச் சத்தாகும். கிராம்பு எண்ணெய் பற்பசை தயாரிப்பில் சிகிச்சைக்கும்பல் சிகிச்சைக்கும், மயக்க மருந்திலும் , சளி இருமல், காய்ச்சல் போன்றவற்றை வெளியேற்றவும் பயன்படுத்தப்படுகிறது.
கிராம்பில் உண்டாகும் பக்க விளைவு:
இதில் உள்ள யூஜெனால் என்னும் வேதிப்பொருள், இரத்த உறைதலை மெதுவாக்குகிறது. கிராம்பு எண்ணையை எடுத்துக் கொள்வது ரத்தப்போக்கு கோளாறு உள்ளவர்களுக்கு ரத்தப்போக்கு ஏற்படக் கூடும். ரத்த சர்க்கரை அளவை பாதிக்கும் ரசாயனங்கள் கிராம்பில் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை குறைக்க செய்யும். கிராம்பில் உள்ள யூஜினால் வாய்வழியாக எடுக்கும்போது வாய்வழி எரிச்சலை உண்டாக்கும்.
உலக சுகாதார அமைப்பின் அறிக்கை படி கிராம்பில் தினசரி ஒரு கிலோ எடைக்கு 2.5 மைக்ரோகிராம் அளவு மட்டுமே சேர்க்க வேண்டும். இதை தாண்டி நாம் சேர்க்கும் போது சிக்கல் உண்டாகும். கிராம்பு உணவு சுவையை கொடுக்கக்கூடியது. நம்ப முடியாத நன்மைகளை வழங்குகிறது. ஆனால் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் போது கடுமையான உடல்நல பிரச்சனையும் உருவாக்கும். எனவே அதிக அளவு உணவில் சேர்ப்பதற்கு முன்பு மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.