பூசாரிகள் பேரவை கூட்டம் நடைபெற்றுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை ஆதிகைலாசநாதர் கோவிலில் வைத்து மாவட்ட பூசாரிகள் பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டமானது மாவட்ட தலைவர் சின்னப்பா தலைமையில் நடைபெற்றது. இதில் ஆதிகைலாசநாதர் ஆலய மேலாண்மை அலுவலர் விவேகானந்தன், சைவ சித்தாந்த பேரவை முன்னாள் அமைப்பாளர் பாலசுப்பிரமணியன், செல்லக்கண்ணு, ஏராளமான பூசாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் கூட்டத்தில் நமது மாவட்ட மாநாட்டை அடுத்த மாதம் 17-ஆம் தேதி நடத்த வேண்டும், பூசாரிகள் நல வாரியத்தில் உள்ள அனைத்து பூசாரிகளுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும், கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். மேலும் 60 வயது நிறைந்த அனைத்து பூசாரிகளுக்கும் மாத ஓய்வூதியமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். இதனையடுத்து சேதம் அடைந்த நிலையில் உள்ள கிராம கோவில்களை புதுப்பித்து குடமுழுக்கு நடத்த நிதி உதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது .