Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கிராம சபை கூட்டம் நடத்த விடாமல் தடுத்ததாக…. ஊராட்சி மன்ற தலைவர் புகார்…. குறும்பேரியில் பரபரப்பு….!!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் குறும்பேறி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக ராமு என்பவர் உள்ளார். இவர் கலெக்டர் ஆஷ் அமர் குஷ்வாகவிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் எழுதியிருந்ததாவது “காந்தி ஜெயந்தி முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அருணாச்சலத்தின் மகனான ராஜா ஊராட்சி செயலாளர் மற்றும் அலுவலர்களை தகாத வார்த்தையில் திட்டினார். மேலும் நான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்பதால் என்னை வைத்து கிராமத்தில் சாதி சண்டையை ஏற்படுத்த பார்க்கின்றார். அது மட்டுமல்லாமல் கிராம சபை கூட்டத்தை நடத்த விடாமலும் தடுக்கின்றார்” என அதில் கூறப்பட்டிருந்தது.

இதேபோன்று கந்திலி கிழக்கு ஒன்றிய திமுக அவைத்தலைவர் ராஜா தனது ஆதரவாளர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருந்ததாவது “குறும்பேறு கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கடந்த முறை வரவு செலவு கணக்கு கொடுக்கவில்லை. மேலும் கிராம சபை நடத்தும் பேனர்களில் முதலமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ படம் ஏன் போடவில்லை எனவும் ஊராட்சி மோட்டார் ரிப்பேர் எனவும் பிளீச்சிங் பவுடர் போடாமலேயே பொய் கணக்கு எழுதியதையும் கேட்டதற்கு வேண்டுமென்றே பொய் தகவல்களை பரப்பி சாதி கலவரத்தை தூண்ட ஊராட்சி மன்ற தலைவர் ராமு முயற்சி செய்கிறார்” என்று கூறப்பட்டிருந்தது.

Categories

Tech |