தமிழகத்தில் கிராம சபை கூட்ட செலவின வரம்பை 5000 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் ஆண்டுதோறும் குடியரசு தினம், உழைப்பாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நான்கு நாட்களில் மட்டும், கிராம சபைக் கூட்டம் நடந்து வந்தது. இக்கூட்டங்களில் மக்கள் பங்கேற்பதையும், முடிவெடுப்பதையும் அதிகப்படுத்த, இனி ஒவ்வொரு ஆண்டும் ஆறு முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும்.
கூடுதலாக, உலக தண்ணீர் தினமான, மார்ச் 22, உள்ளாட்சி தினமான நவ., 1 ஆகிய நாட்களிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடக்கும் என முதலமைச்சர் அறிவித்தார். அதன்படி அனைத்து ஊராட்சிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் 6 முறை கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிராம சபையினை நடத்த கிராம ஊராட்சியின் அனுமதிப்படி ஊராட்சி நிதியிலிருந்துசெய்யப்படும் செலவின வரம்பு ஆயிரம் ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.