Categories
மாநில செய்திகள்

கிராம நிர்வாக அதிகாரி தேர்விலும் முறைகேடு: ரூ.15 லட்சம் கொடுத்து வேலை..! அதிர்ச்சி தகவல்கள் …!!

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 மற்றும் குரூப்-2ஏ  ஆகிய தேர்வுகளில் நடந்த முறைகேடுகளில்  முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் ஜெயக்குமார் நேற்று கோர்ட்டில் சரண் அடைந்தார்.

இதனைத்தொடர்ந்து விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்த வண்ணமாக உஉள்ளது. இந்த முறைகேடுகளுக்கு இடைத்தரகர் ஜெயக்குமாரின் கூட்டாளியாக செயல்பட்ட விழுப்புரம் மாவட்டம் அரியூர் கிராம நிர்வாக அதிகாரியான நாராயணன் என்ற சக்தி என்பவரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வந்த நிலையில் சக்தி நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சிக்கினார்.

கிராம நிர்வாக அதிகாரி நாராயணன் என்ற  சக்தி கைது செய்யப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அவரிடம் நடத்திய விசாரணையில் 2016-ம் ஆண்டு குரூப்-4 கிராம நிர்வாக அதிகாரி தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்தது.

ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள போலீஸ்காரர்கள் சித்தாண்டி, பூபதி, முத்துக்குமார் ஆகியோர் கிராம நிர்வாக அதிகாரி சக்தி மூலமாகத்தான் ஜெயக்குமாரிடம் பணத்தை கொடுத்துள்ளனர்.

போலீஸ்காரர் சித்தாண்டி ரூ.2 கோடி வரை பணம்  கொடுத்து 22 பேருக்கு முறைகேடாக வேலை வாங்கி கொடுத்துள்ளார் .மேலும் கைதான இன்னொரு போலீஸ்காரர் பூபதியும் ரூ.55 லட்சம் கொடுத்து 5 பேரை முறைகேடாக அரசு வேலையில் சேர்த்துள்ளார்.

கிராம நிர்வாக அதிகாரி சக்தி ரூ.15 லட்சத்தை கொடுத்து ஜெயக்குமார் மூலம்  முறைகேடாக வேலையில் சேர்ந்தது அம்பலமாகியுள்ளது.

நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ள ஜெயக்குமாரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். அப்போது மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |