Categories
மாநில செய்திகள்

கிராம நிர்வாக அலுவலகங்களில்…. லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை….!!!!

புதுச்சேரியில் சென்டாக் மூலம் உயர் நிலைக் கல்வியில் சேரும் மாணவர்களின் சேர்க்கையில் சாதி,குடியிருப்பு, குடியுரிமை ஆகிய வருவாய்த்துறை சான்றிதழை செலுத்தவேண்டும். இதனால் வருவாய்த்துறை சான்றிதழுக்கு விண்ணப்பித்து வருபவர்களிடம் இடைத்தரகர்கள் மூலமாக லஞ்சம் வாங்கபட்டு வருவதாகவும் ,லஞ்சம் கொடுக்காதவர்களுக்கு சான்றிதழை காலதாமதமாக கொடுப்பதாகவும் புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு போலீசில் தொடர்ந்து புகார்கள்  அளிக்கப்பட்டு வருகின்றன.

அந்த புகாரின் பெயரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்ட் நித்தின் கவுல் உத்திரவின்படி,லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர்கள் ஹேமச்சந்திரன், தியாகராஜன், சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் காந்திநகரில் உள்ள தட்டாஞ்சாவடி, உழவர்கரை, ரெட்டியார்பாளையம் ஆகிய பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தினார்கள் . அப்போது கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழ் வழங்குவது குறித்து விசாரணை நடத்தப்பட்டது . இந்த சோதனை காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பேசிய லஞ்ச ஒழிப்பு போலீசார் , வருவாய் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் பொதுமக்களிடம் இடைத்தரகர்கள் மூலமாக லஞ்சம் வாங்குவதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன. அந்த புகார்களின் பேரில் தான் கிராம அலுவலகத்தில் தாங்கள் சோதனை செய்தோம் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பிற அரசு துறைகளிலும் புகார்கள்  வந்தால் தொடர்ந்து சோதனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |