Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட்டில் அரசியல் இல்லை…. குல்தீப் யாதவ் விளையாடாததற்கு காரணம் இருக்கு…. இந்த முறை அவர் அசத்துவார்….!!

இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரில் குல்தீப் யாதவ் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 4 டெஸ்ட் தொடர் போட்டிகள் தற்போது துவங்கவிருக்கிறது. இப்போட்டியானது சென்னை மற்றும் அகமதாபாத்தில் நடைபெற உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதன்படி இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது வரும் பிப்ரவரி 5-ம் தேதி அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. மேலும் இதில் பங்கேற்க இருக்கும் இரண்டு அணியின் வீரர்களும் ஜனவரி 27ஆம் தேதியன்று சென்னை வர இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் இத்தொடரில் இடம் பெற்றிருக்கிறார். மேலும் இதற்கு முன்பு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் குல்தீப் யாதவ் இடம்பெற்றிருந்தார்.

எனினும் அவர் ஒரு போட்டியில் கூட ஆட அனுமதிக்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். மேலும் இதன் மூலம் இந்திய அணியில் நடக்கும் அரசியல் தெரிகிறது என்ற சர்ச்சைகளும் ஏற்பட்டது. இது குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறுகையில், ஆஸ்திரேலிய தொடரில் குல்தீப்பை ஆட அனுமதிக்காததற்கு சில காரணங்கள் உள்ளது. குல்தீப் சிறந்த பந்து வீச்சாளர். மேலும் வாய்ப்பு கிடைக்கும் போது அவர் தன்  முழுத்திறமையையும் வெளிப்படுத்துவார் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை. எனவே நடக்கவிருக்கும் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் குல்தீப் யாதவ் நிச்சயம் இடம் பெறுவார் என்று அறிவித்துள்ளார்.

Categories

Tech |