Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கிரிக்கெட்ல தோனியும், கோலியும் ஹீரோக்களா?….. மொதல்ல நிறுத்துங்க….. ரசிகர்களை வெளுத்து வாங்கிய கம்பீர்.!!

ஒருவரை மட்டும் ஹீரோவாக கொண்டாடும் கலாச்சாரத்தில் இருந்து வெளியே வாருங்கள் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேர்காணல் ஒன்றில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் பேசியதாவது, “இந்திய அணியில் பெரிய பிராண்டை உருவாக்காதீர்கள். பெரிய பிராண்ட் என்றால் அது இந்திய கிரிக்கெட்டாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர தனி நபராக இருக்க கூடாது. ஹீரோக்களாக கொண்டாடும் கலாச்சாரம் வேறொருவர் வரும் போது மறைந்து விடும் என்பதை நினைக்க மாட்டீர்களா?. முன்பு எம்எஸ் தோனி என்றால்  தற்போது விராட் கோலி.. சமீபத்தில் ஆப்கானுக்கு எதிராக விராட் கோலி சதம் விளாசிய போது அவரை நாடே கொண்டாடியது. அதே போட்டியில் சிறிய ஊரான மிரட்டில் இருந்து வந்த புவனேஸ்வர் குமார் 5 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

ஆனால் அவரைப் பற்றி கமெண்டரியில் என்னைத் தவிர யாரும் பேசவே இல்லை. கோலி அடித்த சதத்தை மட்டும் தான் நாடேங்கும் பேசுகின்றனர். எனவே ஒருவரை ஹீரோவாக கொண்டாடுவதில் இருந்து இந்தியா முதலில் வெளியே வர வேண்டும். தொடர்ந்து ஒருவரை ஊடகங்கள் கொண்டாடும்போது காலங்கள் செல்ல செல்ல அது ஒரு பிராண்டாக மாறிவிடும்.. அதுதான் 1983, 2007 மற்றும் 2011 ல் நடந்துள்ளது என தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினைகளுக்கு முதல் காரணமாக சமூக வலைதளம் இருக்கிறது. அங்கு அதிகப்படியான பாலோவர்கள் இருந்தால் அதுவே ஒரு பிராண்டை உருவாக்குகின்றது. இரண்டாவதாக ஊடகங்கள், நாள்தோறும் ஒருவரைப் பற்றி நாள்தோறும் பேசிக்கொண்டே இருந்தால் அவர்கள் ஒரு பிராண்டாக மாறி விடுகிறார்கள்.. இது தான் 1983 இல் இருந்து தொடங்கியது. இந்தியா முதல் உலகக் கோப்பை கைப்பற்றிய போது கபில் தேவை மையப்படுத்தி பேசினார்கள்.

பின் 2007 மற்றும் 2011 இல் உலகக் கோப்பை வென்ற போது தோனியை பற்றி பேசுகிறார்கள். முதலில் இந்த கலாச்சாரத்தை யார் உருவாக்கினார்கள்? வீரர்கள் இதனை செய்யவில்லை மற்றும் பிசிசிஐயும் செய்யவில்லை.
செய்தி சேனல்கள் மற்றும் ஒளிபரப்பாளர்கள் இந்திய கிரிக்கெட்டை பற்றி எப்போதாவது பேசியிருக்கிறார்களா?
மாறாக 2- 3 ஒளிபரப்பு நிறுவனங்கள் இதனை உருவாக்குகின்றன..

ஆனால் அவர்களால் இந்திய கிரிக்கெட்டை ஆள முடியாது. இந்திய கிரிக்கெட்டை விளையாடும் 15 பேர் தான் ஆள வேண்டும். மேலும் ஒரு வெற்றிக்காக அனைவருமே சிறந்த பங்காற்றுகிறார்கள். ஆனால் ஒரு சிலரை பிராண்டாக உருவாக்கி ஊடகங்கள் தான் லாபத்துக்காக இப்படி செய்கிறார்கள் என்று விளாசினார்.

அதாவது 15 பேர் சேர்ந்து அணிக்கு வெற்றியை தேடி கொடுக்கும்போது ஒரு சிலர் மட்டுமே பெற்றுக் கொடுத்ததாக ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். எனவே ரசிகர்களையும், அவர்களை வைத்து பிராண்டை உருவாக்கி லாபத்தை சம்பாதிக்கும் ஒளிபரப்பு நிறுவனங்களையும் சாடியுள்ளார் கௌதம் கம்பீர்..

Categories

Tech |