Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் அணிக்கு மிரட்டல்…. இந்தியா மீது குற்றசாட்டு…. வம்பிழுக்கும் பாகிஸ்தான் …!!

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களுக்கு இந்தியாவில் இருந்து கொலை மிரட்டல் வந்ததாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள்  இடையேயான கிரிக்கெட் தொடர் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதனால் களம் இறங்காமலே நியூசிலாந்து அணி நாடு திரும்பியது. இந்நிலையில் பாகிஸ்தான் தொடரை நியூஸிலாந்து ரத்து செய்ததற்கு இந்தியா தான் காரணம் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களுக்கு இந்தியாவில் இருந்து மின்னஞ்சல்கள் மூலம் மிரட்டல் வந்ததாக பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சர் பவர் சவுத்ரி தெரிவித்துள்ளார். விபிஎன் செயலி மூலம் இந்த மின்னஞ்சல்கள் சிங்கப்பூரில் உருவாக்கப்பட்டது போன்று மாற்றி அமைக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |