இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக வீரர் நடராஜனுக்கு மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியில் விளையாடி கொண்டிருந்த வருண் சக்கரவர்த்தி என்பவர் காயம் ஏற்பட்டதால் டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதனால் அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் சேலம் சின்னம்பட்டி பகுதியில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். மேலும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வந்துள்ளார். அதுமட்டுமன்றி துல்லியமான யார்க்கர், தரமான பந்துவீச்சு மூலமாக அனைவரையும் அவர் திரும்பி பார்க்க வைத்துள்ளார். டிவில்லியர்ஸ் மற்றும் தோனி உள்ளிட்ட கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களை திணற வைத்துள்ளார். அப்படிப்பட்ட நடராஜன் தற்போது இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக இளைஞர் சேலம் நடராஜனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவரை தொடர்பு கொண்டு பேசி வாழ்த்துக்களை தெரிவித்தேன். மேலும் அவர் பல உயர்வுகளைப் பெற்று வெற்றிகளைக் குவிக்கவும், அவர் மூலமாக இந்திய அணிக்கு பெருமை சேர்க் கவும் எனது விருப்பங்களை தெரிவித்துள்ளேன். அவரின் அனைத்து கனவுகளும் நிறைவேற நான் வாழ்த்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.