உலக கிரிக்கெட் அரங்கத்தில் 20 ஓவர் போட்டியின் சுவாரசியத்தை அதிகரித்ததில் ஐபிஎல் தொடருக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த ஐபிஎல் தொடரை குஜராத்தில் போலியாக நடத்திய கும்பல் தற்போது சிக்கி உள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள மோலிப்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த சுமார் 21 பேர் போலி ஐபிஎல் தொடரை நடத்தி ரஷ்ய சூதாட்டம் நபர்களை ஏமாற்றியுள்ளனர். அவர்களை சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஜெர்சிகளை அணிந்து கொண்டு இந்த தொடரை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த மோசடியின் பின்னணியில் உள்ள நான்கு பேரை காவல்துறை கைது செய்துள்ளது. உண்மையான ஐபிஎல் விளையாட்டு போன்றே காண்பிப்பதற்காக இவர்கள் பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே போன்று பேசுவதற்காக ஒருவரையும் நியமித்துள்ளார்கள். இந்த மோசடி கும்பல் அமைத்த டெலிகிராம் சேனலில் ரஷ்ய சூதாட்டக்காரர்கள் பந்தயம் கட்டியுள்ளார்கள். இது குறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.