வாலிபர் ஒருவர் தன்னுடைய அம்மா மற்றும் தங்கையை விஷம் வைத்து கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் மெட்சல் நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் ரெட்டி. இவர் மூன்று வருடங்களுக்கு முன்பு சாலை விபத்து ஒன்றில் பலியாகியுள்ளார். இவர் மனைவி சுனிதா(42) தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு சாய் நாத் என்ற ஒரு மகனும் அனுஷா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் சாய்நாதா படித்துக்கொண்டே பகுதி நேர வேலை ஒன்று செய்து வந்துள்ளார். இந்நிலையில் சாய்நாத்திற்கு கிரிக்கெட் சூதாட்டத்தில் அதிக ஆர்வம் இருந்ததால், தன்னுடைய தந்தையின் காப்பீட்டு பணமான 20 லட்ச ரூபாயை தாயாருக்குத் தெரியாமல் வங்கியில் இருந்து எடுத்துள்ளார்.
பின்னர் அதை கிரிக்கெட் சூதாட்டத்திற்கு பயன்படுத்தி அனைத்தையும் இழந்துள்ளார். இருப்பினும் ஆசை தீராத சாய்நாத் வீட்டில் இருந்த நகையை விற்று பணத்தை தருமாறு தன்னுடைய அம்மாமற்றும் அனுஷாவிடம் கேட்டுள்ளார். இதற்கு அவர்கள் கண்டித்ததால் கோபமடைந்த சாய்நாத் இருவரையும் கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று வீட்டில் இருந்த சாப்பாட்டில் விஷம் மாத்திரையை கலந்து விட்டு சாய் நாத் வேலைக்கு சென்றுள்ளார்.
உணவை அவரின் அம்மா சுனிதாவும், தங்கை அனுஷாவும் சாப்பிட்ட போது உணவு சரியா இல்லாததை உணர்ந்த சுனிதா உடனடியாக மகனை தொடர்பு கொண்டு உணவு சரியில்லை சாப்பிட வேண்டாம் என்று கூறியுள்ளார். தான் விஷம் வைத்து இருவருக்கும் தெரிந்து விட்டது என்று நினைத்து வீட்டிற்கு வந்த அவர் தாயும், சகோதரியும் மயக்க நிலைக்கு செல்லும் வரை காத்திருந்துள்ளார். மயக்கமடைந்த பிறகு மருத்துமனையில் சிகிச்சைக்காக இருவரையும் அனுமதித்துள்ளார். ஆனால் இருவரும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து இருவரின் இறுதிச்சடங்கின் போது சாய் நாத் நடவடிக்கை சரியில்லை என்பதால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவரிடம் விசாரித்த போது தான் கோலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.