Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவருக்கு கொரோனா – அதிர்ச்சியில் கிரிக்கெட் பிரியர்கள் …!!

வங்கதேச தேர்வுக்குழு தலைவர் ஹபிபுல் பஷருக்கு கொரோனா தொற்று  உறுதியாகியுள்ளது .

உலகெங்கும் நாளுக்குநாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸால் பல்வேறு பிரபலங்களும்  பாதிக்கப்பட்டனர் . ஆல்ரவுண்டர் முஹமுதுல்லா, வங்கதேச கிரிக்கெட் டெஸ்ட் கேப்டன் மோமினுல் ஹாக் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் வங்கதேச தேர்வு குழு தலைவரான ஹபிபுல் பஷருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது குறித்து
அவர் வெளியிட்டுள்ள பதிவில், மிகவும் பாதுகாப்பாக இருந்தும் நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன்.

கடந்த திங்கட்கிழமை காய்ச்சல் 102 டிகிரியாக இருந்தது.  அடுத்த நாளும் காய்ச்சல் குறையாததால் பரிசோதனையை மேற்கொண்டேன். இன்று மாலை வந்த முடிவில் எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  எனவே என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்றார்.வங்கதேசத்திற்காக 111 ஒரு நாள் போட்டிகள், 50 டெஸ்ட் போட்டிகளில் ஹபிபுல் பஷர் ஆடியுள்ளார் .மேலும் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அபு ஜெயத்,சைஃப் ஹசன்,மோர்டசா ஆகிய வங்கதேச வீரர்கள் தொற்றிலிருந்து  மீண்டுள்ளனர்.

Categories

Tech |