Categories
உலக செய்திகள்

கிரிக்கெட் போட்டியின் நடுவே… ஆஸ்திரேலியா பெண்ணிற்கு காதலை சொன்ன இந்திய பையன்… வைரலான வீடியோ..!!

இந்தியா ஆஸ்திரேலியா இடையே 2வது ஒருநாள் போட்டியின்போது ஆஸ்திரேலியா பெண்ணிற்கு இந்திய இளைஞர் ஒருவர் தனது காதலை தெரிவித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்றாவது ஒருநாள் போட்டி, டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. தற்போது 2வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய டீசர்ட் அணிந்த இளைஞர் ஒருவர், ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் பெண்ணிடம் காதலை வெளிப்படுத்தியுள்ளார். அந்தப் பெண்ணும் அவர் காதலுக்கு ஓகே சொல்லி, கட்டியணைத்து முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இந்த காட்சிகள் கேமராவில் சிக்கியத.

இந்த வீடியோ  ஸ்டேடியம் திரையில் ஒளிபரப்பானது. இந்த அழகான தருணங்களை ஸ்கிரீனில் பார்த்து ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் உள்ளிட்ட அனைத்து வீரர்களும் கைதட்டினர். ஆஸ்திரேலியா கிரிக்கெட் செய்திகளை பகிரும் ட்விட்டர் பக்கத்தில் இதுதான் இன்றைய ரிஸ்கான ஆட்டம் என்று பதிவிட்டு வீடியோ வெளியானது. இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில் வைரலாகியுள்ளது.

https://www.youtube.com/watch?v=tKb4DZnGudA&feature=youtu.be

Categories

Tech |