Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் போட்டியில் மயங்கி விழுந்த 2 வீராங்கனைகள்…. அதிர்ச்சி….!!!

ஆண்ட்டிகுவாவில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 2வது டி20 சர்வதேச போட்டியின் போது மே.இ.தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணியின் சினெல் ஹென்றி மற்றும் செடியன் நேஷன் என்ற இரு வீராங்கனைகள் அடுத்தடுத்து மைதானத்திலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முதலில் சினெல் ஹென்றி மயங்கி விழ அவரை ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் சென்றனர். 10 நிமிடங்களுக்குப் பிறகு செடியன் நேஷன் என்ற வீராங்கனையும் மயங்கி விழுந்தார், இவரையும் ஸ்ட்ரெச்சரில் கொண்டு சென்றனர். இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இப்போது உடல் நிலை தேறி வருவதாக செய்திகள் தெரிவித்தாலும், இருவரும் ஏன் மயங்கி விழுந்தனர் என்பது பற்றி விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

Categories

Tech |