இந்தியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டு என்றால் அது கிரிக்கெட். கால்பந்து விளையாட்டுக்கு அடுத்து உலக அளவில் மிகவும் பிரபலமான விளையாட்டில் கிரிக்கெட் இரண்டாவது இடத்தை பிடிக்கின்றது. கிரிக்கெட் போட்டிகள் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகின்றது. இதெல்லாம் இருக்கட்டும் நீங்கள் கிரிக்கெட் பார்க்கும் போது மைதானத்தில் 2 அல்லது 3 பிட்ச் இருப்பதைப் பார்த்திருப்போம். ஒரு மைதானத்தில் ஒரு மேட்ச் விளையாடுவதற்கு எதற்கு இத்தனை பிட்ச் அமைத்து உள்ளார்கள் என்று என்றைக்காவது நீங்கள் யோசித்து உள்ளீர்களா?
பலரும் என்ன நினைப்பார்கள் என்றால் இதெல்லாம் தேவைக்கு அதிகமாக போட்டு வைக்கப்பட்டுள்ள பிட்ச் என்று நினைத்து இருப்பார்கள். அதாவது ஒரு பிட்ச்சில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது அது சேதம் அடைந்து விட்டால் அதற்கு அருகிலுள்ள பிட்ச்சில் விளையாடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதுதான் இல்லை. ஒரே மைதானத்தில் நிறைய பிட்ச்சுகள் இருப்பதற்கு வேறு ஒரு காரணம் உள்ளது.
அதாவது ஒரு மைதானத்தில் நடுவே உள்ள பிட்ச்சில் டெஸ்ட் மற்றும் ஒன்டே மேட்ச் நடைபெறும். இடது மற்றும் வலது புறம் உள்ள பிட்ச்சில் உள்ளூர் கிரிக்கெட் விளையாடுவார்கள். அதாவது இரஞ்சி டிராபி, உள்ளூர் அளவில் விளையாடும் போட்டிகள் இந்த பிட்ச்சில் விளையாடுவார்கள். இப்படி ஒவ்வொரு பிட்ச்சுக்கும் ஒவ்வொரு விதமான மேட்ச்கள் விளையாடுவார்கள் என்பதுதான் உண்மை.