இப்போதெல்லாம் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு ஏராளமான மரணங்கள் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. தினம்தோறும் செய்திகளிலும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக வட மாநிலங்களில் தான் இது போன்ற மரணங்கள் நிகழ்ந்து வருகிறது அந்த வகையில் உ.பி, கான்பூர் மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 16 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளான்.
அனுஜ் என்ற சிறுவன் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடியபோது ரன்கள் எடுக்க ஓடியுள்ளான். அப்போது ஆடுகளத்தின் நடுவில் சுருண்டு விழ, உடனே நண்பர்கள் அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.