Categories
தேசிய செய்திகள்

கிரிக்கெட் விளையாடும் போது மாரடைப்பால் உயிரிழந்த 16 வயது சிறுவன்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் கான்பூரில் அனுஜ் பாண்டே என்ற 16 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென கீழே விழுந்த சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் அனுமதிக்கவில்லை.

அதன் பிறகு சிறுவனின் இறுதி சடங்குகள் முடிவடைந்தது. கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது சிறுவன் ஓடம் முயன்ற போது அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் அதன் பிறகு அவர் தரையில் விழுந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |