Categories
உலக செய்திகள் கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களை வகிக்கும் ஜாம்பவான்கள் -யார் ???

உலகளவில் ஆன்லைன் மூலம் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா, மற்றும் எம்எஸ் தோனி திகழ்கிறார்கள்.

உலக அளவில் ஆன்-லைனில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் அணிகள் பற்றி ‘SEMrush’ ஆய்வு நடத்தியது.இதில் விராட்கோலி உலகளவில் தலைசிறந்த வீரராகவும் அதிகம் வருமானம் பெறும் வீரராகவும்  திகழ்கிறார்.

விராட் கோலி இந்த வருடம் ஜனவரியில் இருந்து ஜூன் மாதம்  வரை  சராசரியாக 16.2 லட்சம் முறை தேடப்பட்டு முதல் இடத்தை வகிக்கிறார் .ரோகித் சர்மா பெயர் சராசரியாக 9.7 லட்சம் முறையும், எம்.எஸ்.டோனி 9.4 லட்சம் முறையும், ஜார்ஜ் மெக்கே 9.1 லட்சம் முறையும், ஜோஷ் ரிச்சார்ட்ஸ் 7.1 லட்சம் முறையும், ஹர்திக் பாண்ட்யா 6.7 லட்சம் முறையும், சச்சின் தெண்டுல்கர் 5.4 லட்சம் முறையும், கிறிஸ் மேத்யூஸ் 4.1 லட்சம் முறையும், ஷ்ரேயாஸ் அய்யர் 3.4 லட்சம் முறையும் தேடப்பட்டுள்ளனர்.

 

 

Categories

Tech |