Categories
தேசிய செய்திகள்

கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டுக்காக நான் பிரார்த்திக்கிறேன்…. பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்….!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் இருப்பவர் ரிஷப் பண்ட். இவர் உத்தரகாண்டில் இருந்து டெல்லிக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த கார்‌ சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ரிஷப் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு நெற்றி மற்றும் முதுகு பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இவர் குணமடைய வேண்டும் என்று கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். அந்த வகையில் பிரதமர் மோடி கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்  விரைவில் குணமடைய வேண்டும் என்று ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டுக்கு விபத்து ஏற்பட்டதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அவரின் உடல் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

.

Categories

Tech |