பண மோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி அளிக்க கிரிப்டோகரென்ஸியை பயன்படுத்தலாம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து கூறியுள்ளார்.
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதிய கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் உயர்மட்டக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அரசின் மிகப்பெரிய ஆபத்து, பண மோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி அளிக்க கிரிப்டோகரன்சியை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு ஒரே தீர்வு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விதிகளை ஒழுங்குபடுத்துவது. அதேநேரம் ஒரு நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்தால் அது சாத்தியமில்லை என்று தெரிவித்த அவர், மிகப்பெரிய அளவில் ஒழுங்குமுறை விதிகள் இருந்தால் மட்டுமே கிரிப்டோகரன்சி முறைகேடுகளை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.