Categories
மாநில செய்திகள்

கிரிப்டோகரன்சி விளம்பரங்களுக்கு தடை…. உயர் நீதிமன்றத்தில் மனு…!!!!

கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. திருநெல்வேலியை சேர்ந்த அய்யா என்பவர் இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது “உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று கேட்டுள்ளார்.

மேலும் முறைப்படுத்தப்படாத கிரிப்டோகரன்சிகளில் பாதுகாப்பு அபாயம் உள்ளதாக ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இந்த பரிவர்த்தனைகளை ரிசர் வ் வங்கி அங்கீகரிக்கவில்லை, கிரிப்டோகரன்சி சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் , பயங்கரவாத செயல்களுக்கும் பயன்படுத்தப்படுவதாக அந்த மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Categories

Tech |