Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கிரிப்டோ கரன்சியில் முதலீடு” டெலிகிராமில் வந்த மெசேஜால் ரூ. 1 லட்சத்தை இழந்த வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!!!

வாலிபரிடம் இருந்து பறிக்கப்பட்ட பணத்தை காவல்துறையினர் மீட்டு ஒப்படைத்துள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த ஆன்லைன் மோசடி தொடர்பான பல்வேறு செய்திகள் தினந்தோறும் வந்து கொண்டு தான் இருக்கிறது. இருப்பினும் சிலர் செல்போனுக்கு வரும் குறுந்தகவல் மற்றும் பொய்யான செய்திகளை நம்பி பணத்தை பறிகொடுத்து வருகின்றனர். இதன் காரணமாக காவல்துறையினர் பொதுமக்களை ஆன்லைன் மோசடிகளில் இருந்து எச்சரிக்கையாக இருக்கும் படி எச்சரித்து வருவதோடு, யுபிஐ, வங்கி கணக்கு எண், ஆதார் எண், பான் கார்டு, ஓடிபி நம்பர் போன்ற விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம் எனவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஹரிஹரசுதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போனில் டெலிகிராம் என்ற செயலியை பயன்படுத்தி வருகிறார். இந்த செயலியில் கிரிப்டோ கரன்சி டிரேடிங் எனும் ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அந்த மெசேஜில் க்ரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக அளவில் லாபம் சம்பாதிக்கலாம் என இருந்தது. அதன் பின் ஹரிஹரசுதன் செயலியில் இருந்த தொலைபேசி நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறினார். இதை நம்பிய ஹரிஹரசுதனும் 3 தவணைகளாக பணத்தை வங்கி கணக்குக்கு அனுப்பியுள்ளார். இவர் மொத்தம் 1 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் அனுப்பி உள்ளார்.

இந்த பணத்தை ஹரிஹரசுதன் செலுத்திய பிறகு கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ததற்கான ஆவணம் ஏதும் வராததால் செயலியில் வந்த செல்போன் நம்பருக்கு மீண்டும் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அந்த நபர் போனை எடுத்துப் பேசாததால் தான் ஏமாற்ற பட்டத்தை உணர்ந்த ஹரிஹரசுதன் சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹரிஹரசுதனை ஏமாற்றியது தெரியவந்தது. மேலும் ஹரிஹரசுதனிடமிருந்து பறிக்கப்பட்ட 1 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் பணத்தை போலீசார் மீட்டு அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Categories

Tech |