Categories
அரசியல் மாநில செய்திகள்

கிரீன் சிக்னல் கொடுத்த PM மோடி!!… கைமாறும் கூட்டணி…. ஓபிஎஸ் உள்ளே…. இபிஎஸ் வெளியே…. பெங்களூரு புகழேந்தி ஒரே போடு….!!!!!

அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி தற்போது சொன்ன ஒரு விஷயம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டில் பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஒருமையில் பேசியுள்ளார். இதன் மூலம் எடப்பாடி தலைமையிலான அணி பாஜக கூட்டணியில் இருந்து விலக போவதாக மறைமுகமாக அறிவித்துள்ளது. நாங்கள் பாஜகவில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகி விட்டோம் என்பதைத்தான் சிவி சண்முகத்தின் பேச்சின் மூலம் எடப்பாடி பழனிச்சாமி நிரூபித்துள்ளார். சிவி சண்முகத்தின் பேச்சு என்பது எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சு என்று திட்டவட்டமாக தெரிந்துள்ளது.

4 வருடம் ஆட்சியில் இருக்கும்போது பாஜக கூட்டணி தேவைப்பட்ட நிலையில், தற்போது தேவைப்படவில்லை. அதிமுகவில் அன்று ஒற்றுமை. இன்று திடீர் கோபம். இது எதற்காக என்பதை எடப்பாடி தெளிவுபடுத்த வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி ஓபிஎஸ் மீது நல்ல மரியாதை வைத்துள்ளதோடு அவரை பாஜக மரியாதை ஆகவும் நடத்துகிறது. ஊழல்வாதிகளுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்பதுதான் பாஜகவின் முடிவு.

எனவே இந்த விவகாரத்தில் அண்ணாமலை நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் உச்சநீதிமன்றத்தில் ஜனவரி 4-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு தொடர்பான விசாரணை மீண்டும் வர இருக்கும் நிலையில், பிரதமர் மோடியின் முழு ஆதரவும் ஓ. பன்னீர்செல்வத்திற்கு தான் இருக்கிறது என்று பெங்களூரு புகழேந்தி சொன்னது தற்போது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |