கிருத்திகா உதயநிதியின் அடுத்த படத்தில் அஸ்வின் ஹீரோவாக நடிப்பதாக தகவல் பரவி வருகிறது.
தமிழ் திரையுலகில் நடிகர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். சிவா மற்றும் பிரியா ஆனந்த் நடித்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து கிருத்திகா உதயநிதி நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் இவர் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும், படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் எனவும் கூறப்படுகிறது . மேலும் இந்த படத்தில் குக் வித் கோமாளி அஸ்வின் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் பரவி வந்தது. ஆனால் தற்போது இந்த தகவல் வதந்தி என்றும் நடிகர் காளிதாஸ் ஜெயராம் தான் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.