கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காளிதாஸ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் இளம் நடிகராக வலம் வருபவர் காளிதாஸ் ஜெயராம். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஓடிடியில் வெளியான பாவக் கதைகள் ஆந்தாலஜி வெப் தொடரில் தங்கம் கதையில் சத்தார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார். மேலும் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் காளிதாஸ் ஜெயராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது பிரபல இயக்குனர் கிருத்திகா உதயநிதி புதிதாக இயக்கும் படத்தில் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தில் தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்கிறார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சைமன்.கே.கிங் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது. மேலும் மரம் வளர்ப்பதன் அவசியத்தை உணர்த்தும் விதமாக மரக்கன்றுகளை நட்டு வைத்து இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.