பவளமல்லியின் மருத்துவ குணங்கள் என்னவென்று இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
பவளமல்லி சொரசொரப்பான இலைகளை கொண்டது. கொத்தான பூக்களை உடையது. பூக்கள் வெள்ளை நிறமம், காம்புகள் சிவப்பு நிறமும் உடையது. இந்த பூக்கள் நல்ல மணத்தைக் கொண்டுள்ளது. இதனால் சளி, இருமல் கட்டுப்பாட்டுக்குள் வரும். ரத்தவட்ட அணுக்களின் எண்ணிக்கை மற்றும் ஹீமோகுளோபினை அதிகரிக்கும்.
பவளமல்லியின் இலைகளைக் கொண்டு செய்யப்படும் கசாயம் பருவ காலத்தில் ஏற்படக்கூடிய படர்தாமரை நோயை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. பவளமல்லியை தலையில் வைப்பதால் பொடுகு பிரச்சனை தீரும். வேர்வையை தூண்டக்கூடியது, வலி ,வீக்கத்தை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
இடுப்பு வலி என்பது பெண்களின் தீராத பிரச்சனையாக உள்ளது.இந்த பிரச்சனை உள்ளவர்கள் பவளமல்லியின் இலைகளை கசாயம் வைத்து காலை மாலை இருவேளையும் குடித்து வர விரைவில் இடுப்பு வலி குணமாகும். பவளமல்லி இலைகளை வைத்து காய்ச்சலை கட்டுப்படுத்தும் மருந்துகள் தயாரிக்கலாம்.
கசாயம் செய்ய தேவையான பொருட்கள்:
பவளமல்லி இலை – ஒரு கைப்பிடி பனங்கற்கண்டு – 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி – சிறு துண்டு
பவளமல்லி இலையை நீரில் நன்றாக அலசி கொள்ளவும். அதனுடன் சிறு துண்டு இஞ்சி தட்டி போட்டு ,2 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து, ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். பின்பு வடிகட்டி தினமும் இருவேளை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் காய்ச்சல் போன்ற பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.