பெற்றோரை இழந்த குழந்தைங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட இருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, மத்திய அரசால் திருத்தி அமைக்கப்பட்ட வட்சாலயா மிஷன் மூலம் பயன்பெறுவோர் குடும்ப ஆண்டு வருமானம் கிராமங்களில் உள்ளவர்களுக்கு 72000, நகரங்களில் இருப்பவர்களுக்கு 96,000 மிகாமல் இருக்க வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டிருக்கின்றது.
இத்திட்டத்தில் பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரை இழந்த குழந்தைகள், உயிர் அச்சுறுத்தல் நோயினால் பாதிக்கப்பட்டது குழந்தைகள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படக்கூடிய குழந்தைகள் இதில் பயனடையலாம். இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களை பெறுவதற்காக மாவட்ட மைய நூலகம் எதிரே உள்ள டி.ஆர்.டி.ஏ வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.