Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கிருஷ்ணகிரி அரசு இசைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கான ஓவியப் பயிற்சி”… 96 பேர் பங்கேற்பு…!!!

கிருஷ்ணகிரி அரசு இசைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கான ஓவிய பயிற்சி வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு இசைப்பள்ளியில் ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பாக உலக ஓவிய தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான ஓவிய பயிற்சி ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்றது. இந்த பயிற்சியில் 5 முதல் 16 வயது வரை உள்ள 96 மாணவ-மாணவிகள் பங்கேற்றார்கள்.

இவர்களுக்கு இயற்கை காட்சி மற்றும் தேச தலைவர்கள் என்ற தலைப்பில் ஓவியப் பயிற்சியானது வழங்கப்பட்டது. இந்தப் பயிற்சியானது ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஓவிய ஆசிரியர் பன்னீர்செல்வம், ஓவியர்கள் சவுத்ரி, பரணி மற்றும் விக்ரம் உள்ளிட்டோர் வழங்கினார்கள். மாணவர்கள் வரைந்த ஓவியங்களானது பயிற்சிக்கு பிறகு பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டது.

 

Categories

Tech |