Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்கள்… “தொடங்கிய சுகாதார திருவிழா”…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 ஒன்றியங்களிலும் சுகாதார திருவிழா தொடங்கியுள்ளது என மாவட்ட வருவாய் அலுவலர் கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டமானது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இதில் நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவம், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், உதவி இயக்குனர் வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

இந்த பொதுக் கூட்டத்தில் பேசப்பட்டததாவது, மாவட்டத்திலுள்ள பத்து ஒன்றியங்களிலும் ஒன்றியத்திற்கு ஒரு முகாம் வீதம் சுகாதார திருவிழா நடத்தப்படுகின்றது. அதன்படி இன்று வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் நடத்தப்படுகின்றது. நாளை தளி மற்றும் கெலமங்கலம் ஒன்றியத்தில் நடத்தப்படுகின்றது. 22ஆம் தேதி சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுகாதார திருவிழா நடத்தப்படுகின்றது. இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

Categories

Tech |