Categories
அரசியல் மாநில செய்திகள்

கிருஷ்ணாவதாரம் எடுத்த ஓ.பி.ஸ்… அதிரவைத்த ட்வீட் பதிவு …!!!

பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு போதித்த கீதை வாசகத்தினை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம் .

செல்வி ஜெயலலிதா அவர்கள் மறைந்தத்தில் இருந்தே அதிமுகவில் பல குழப்பங்கள் ஏற்பட்டன.பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின்னர் அந்த குழப்பங்கள் முடிவிற்கு வரப்பட்டு முதலமைச்சராக திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் துணை முதலமைச்சராக ஓ பன்னீர்செல்வம் அவர்களும் பதவி ஏற்றனர்.தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஆண்டு நடைபெறவிருக்கும் நிலையில் தற்போது அதிமுகவில் அடுத்த  முதலவர் வேட்பாளர் யாரென்ற சர்ச்சை எழுந்துள்ளது.

இதனை அடுத்து துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தற்போது புதிய டீவீட்டினை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால்,தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் நலனை கருத்தில் கொண்டே அவரது அனைத்து முடிவுகளும் இருக்கும் என்றும், “எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது,எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது,எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்” என பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு போதித்த கீதை வாசகத்தினை ட்விட்டரில் கூறியுள்ளார்.

Categories

Tech |