கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கேஆர்நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப் பட்டது. இந்த விழாவை முன்னிட்டு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்து 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கோவிலுக்கு வந்தனர்.
இந்த குழந்தைகள் ஆடி பாடி மகிழ்ந்தனர். அதன் பிறகு சிறப்பாக ஆடி பாடிய குழந்தைகளுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.