நகர்புறங்களை பொறுத்தவரையில் கிரெடிட் கார்டு இல்லாத நபரே இல்லை என்று கூறும் அளவிற்கு மிகவும் அதிகமான அளவில் கிரெடிட் கார்டுகள் ஆதிக்கம் செய்து வருகின்றது. கிராமப்புறங்களிலும் தற்போது அதிக பேர் வாங்க துவங்கியுள்ளனர். மேலும் தினந்தோறும் நடைபெறும் செலவுகளை நிரூபிப்பதற்காக முக்கிய கருவிகளில் ஒன்றாக கிரெடிட் கார்டுகள் இருக்கின்றது. இந்தநிலையில் தற்போது பணம் செலுத்த பயன்படும் பொதுவான முறைகளில் ஒன்றாக கிரெடிட் கார்டு மாறி இருக்கின்றது. இதில் ஆன்லைன் மூலமாக மட்டுமில்லாமல் நேரடி விற்பனை மூலமாகவும் நமக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு கிரெடிட் கார்டுகள் மிக முக்கியமான பங்களிப்பை கொண்டிருக்கின்றன.
அதிலும் குறிப்பாக கிரெடிட் கார்டை வைத்து ஸ்வைப் செய்து ஷாப்பிங் செய்து கொள்ளலாம்.மேலும் கட்டணம் செலுத்தலாம். பெட்ரோல் போடலாம், அதேநேரம் ஆன்லைன் ஷாப்பிங் ஆகிய பல்வேறு விஷயங்களுக்காக கிரெடிட் கார்டு அதிகமான அளவில் பயன்படுத்தப் படுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2022 மார்ச் மாதத்தில் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் சுமார் 7.3 கோடி பேர், ரூ.63,327கோடியே ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு செலவிட்டு இருக்கின்றன. அதே நேரம் ஸ்வைப்பிங் செய்வதன் மூலமாக ரூ.38,773கோடி செலவிட்டிருக்கின்றனர்.
மேலும் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் ஆன்லைன் மூலமாக 11 கோடி பரிவர்த்தனைகளும், நேரடி ஸ்வைப்பிங் மூலமாக 11 புள்ளி ஒரு கோடி பரிவர்த்தனைகளும் நடைபெற்றிருக்கின்றது. எண்ணிக்கை அடிப்படையில் கிட்டத்தட்ட ஒரே அளவில் தான் கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. டெபிட் கார்டுகளைப் பொறுத்தவரையில் நேரடியாக 11.9 கோடி பரிவர்த்தனைகளும், ஆன்லைன் மூலமாக 20.8 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றிருக்கின்றன. மேலும் மதிப்பெண் அடிப்படையில் நேரடியாக ரூபாய் 40, 831 கோடிக்கும் ஆன்லைன் மூலமாக ரூ.22,687 கோடிக்கும் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.