இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக யூபிஐ பரிவர்த்தனை முறையை தினசரி ஏராளமானோர் பயன் படுத்தி வருகிறார்கள். இதில் வங்கி கணக்கை இணைத்து எளிதில் பணம் அனுப்பவும் பெறவும் முடியும். அதுமட்டுமல்லாமல் யுபிஐ மூலமாக கடைகள், உணவகங்கள் மற்றும் ஷாப்பிங் என அனைத்து இடங்களிலும் பணம் செலுத்தலாம். இந்த நிலையில் இனி யுபிஐ தளத்துடன் பயனர்கள் தங்கள் கிரெடிட் கார்டுகளை இணைத்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதன் மூலமாக பயனர்கள் தங்கள் ரூபே டெபிட் கார்டுகளில் இருந்து யுபிஐ வழியாக பணம் செலுத்திக் கொள்ளலாம். இதுவரை டெபிட் கார்டுகளில் இருந்தே மட்டுமே யுபிஐ வழியாக பணம் செலுத்தும் முறை இருந்து வந்தது. இதன் மூலம் பயனர்கள் ஸ்வைப் செய்ய வேண்டியதில்லை. நேரடியாக க்யூ ஆர் கோடு மூலமாக பணம் செலுத்த முடியும். இந்த அறிவிப்பு கிரிடிட் கார்டு பயனர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.