Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கிரெடிட் கார்டு பயன்படுத்திய காவலாளி…. நூதன முறையில் ரூ.1 1/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முகையூர் பகுதியில் பிரான்சிஸ் சேவியர்(49) என்பவர் வசித்து வருகிறார் இவர் மின்வாரிய அலுவலகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பிரான்சிஸ் சேவியர் தேசியமயமாக்கப்பட்ட வங்கியால் வழங்கப்பட்ட கிரெடிட் கார்டை உபயோகப்படுத்தி வருகிறார். கடந்த 26-ஆம் தேதி மர்ம நபர் பிரான்சிஸ் சேவியரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் மும்பை கிரெடிட் கார்டு பிரிவிலிருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து கிரெடிட் கார்டில் சர்வீஸ் கட்டணம் 500 ரூபாயிலிருந்து 750 ரூபாயாக உயர்த்த போவதாகவும், அப்படி மாறாமல் இருக்க எனிடெஸ்க் என்ற செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறியுள்ளார்.

அதன்படி பிரான்சிஸ் செயலியை பதிவிறக்கம் செய்து தனது பெயர், பிறந்த தேதி, கிரெடிட் கார்டு ஆகியவற்றை பதிவு செய்த சில மணி நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து 1 லட்சத்து 21 ஆயிரத்து 374 ரூபாய் எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரான்சிஸ் விழுப்புரம் மாவட்ட சைபர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |